பிரதமர் மோடி இரண்டு இந்தியாவை உருவாக்க முயற்சிக்கிறார் - ராகுல் காந்தி

பிரதமர் மோடி இரண்டு இந்தியாவை உருவாக்க முயற்சி செய்கிறார் என ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

Update: 2019-04-10 13:21 GMT

மேற்கு வங்காள மாநிலத்தில் பிரசாரம் மேற்கொண்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சனம் செய்தார். பிரதமர் மோடி, நிரவ் மோடி, அணில் அம்பானி போன்ற தன்னுடைய நண்பர்களுக்காக ஒரு இந்தியாவையும், ஏழை விவசாயிகளுக்காக ஒரு இந்தியாவையும் உருவாக்க முயற்சி செய்கிறார். காங்கிரஸ் ஆட்சிக்குவந்தால் காங்கிரஸ் ரபேல் ஊழல் தொடர்பாக விசாரணையை மேற்கொள்ளும். 

பிரதமர் மோடி மற்றும் குற்றம் செய்த பிறர் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்றார். காங்கிரசுக்கு எதிரான திரிணாமுல் காங்கிரஸ் குற்றச்சாட்டை நிராகரித்த ராகுல் காந்தி, காங்கிரஸ் மட்டும்தான் தேசத்தில் பா.ஜனதாவிற்கு எதிராக கடுமையாக போராடுகிறது என்றார். 

ஏழைகளுக்கு வருடம் ரூ. 72 ஆயிரம் கொடுக்கும் நியாய் திட்டத்திற்கு பணம், அணில் அம்பானி, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி, விஜய் மல்லையா போன்றோரின் பையில் இருந்து எடுக்கப்படும். பிரதமர் மோடி தன்னுடைய நண்பர்கள்  நிரவ் மோடி, அணில் அம்பானி, மெகுல் சோக்‌ஷி போன்றோருக்கு ஒரு இந்தியாவையும், விவசாயிகள் மற்றும் மதிப்புமிக்க மக்களுக்காக ஒரு இந்தியாவையும் உருவாக்க விரும்புகிறார். காங்கிரஸ் இதனை அனுமதிக்காது. விஜய் மல்லையா, நிரவ் மோடி, மெகுல் சோக்‌ஷி போன்ற திருடர்களுக்காக நான் பயப்படவில்லை. பிரதமர் மோடி வேண்டுமென்றால் பயப்படலாம், என கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்