உத்தரபிரதேசத்தில் ரூ.46 லட்சம் செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல்
உத்தரபிரதேசத்தில் ரூ.46 லட்சம் செல்லாத ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.;
முசாபர்நகர்,
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை செய்தபோது, காரில் ரூ.46 லட்சம் மதிப்புள்ள செல்லாத 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அந்த ரூபாய் நோட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் காரில் வந்த 4 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.