பிரதமர் மோடியின் கவலையெல்லாம் இந்தியாவை பற்றியே உள்ளது - வருண் காந்தி

பிரதமர் மோடியின் கவலையெல்லாம் இந்தியாவை பற்றியே உள்ளது என பா.ஜனதா எம்.பி. வருண் காந்தி கூறியுள்ளார்.

Update: 2019-04-08 09:59 GMT
முன்னாள் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் காந்தியின் மனைவி மேனகா காந்தியும், மகன் வருண் காந்தியும் பா.ஜனதாவில் உள்ளனர். வருண் காந்தி 2019 தேர்தலில் பிலிபைட் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடுகிறார். தீவிர பிரசாரம் மேற்கொண்டுவரும் வருண் காந்தி, பிரதமர் மோடியை வெகுவாக பாராட்டினார். 

பிலிபைட்டில் பிரசாரம் செய்த வருண் காந்தி பேசுகையில், பிரதமர் மோடி பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பத்திலிருந்து வந்தவர். என்னுடைய குடும்பத்தை சேர்ந்தவர்களும் பிரதமர்களாக இருந்துள்ளனர், ஆனால் பிரதமர் மோடிதான் யாருமே இந்தியாவிற்கு சேர்க்காத பெருமையை சேர்த்துள்ளார். கடந்த 5 ஆண்டுகளாக ஆட்சியிலிருக்கும் பிரதமர் மோடிக்கு எதிராக எந்தஒரு ஊழல் குற்றச்சாட்டும் கிடையாது. ஊழலில் ஈடுபட அவருக்கு குடும்பமும் கிடையாது. அவர் இந்தியாவிற்காகவே வாழ்கிறார், தேசத்திற்காகவே உயிர்நீப்பார். அவருடைய ஒட்டுமொத்த கவலையும் இந்தியாவைப்பற்றிதான் உள்ளது என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்