முன்னாள் எம்.எல்.ஏ. காரில் பணம் பறிமுதல் - வழக்கு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவு
முன்னாள் எம்.எல்.ஏ. காரில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
புதுடெல்லி,
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான அருணாசலபிரதேசத்தில் வருகிற 11-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. அதனால் தேர்தல் அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது 2 வாகனங்களில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.1.8 கோடியை அதிகாரிகள் கைப்பற்றினர்.
பணம் எடுத்துச்செல்லப்பட்ட ஒரு வாகனம் முன்னாள் எம்.எல்.ஏ. டாங்கி பெர்மே என்பவருக்கு சொந்தமானது ஆகும். மற்றொரு வாகனம் மாநில போக்குவரத்து துறை துணைச்செயலாளர் பெயரில் பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்யுமாறு மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.