நாடாளுமன்ற தேர்தல்: அருணாசல பிரதேசத்தில் முதல் வாக்குப்பதிவு நடந்தது
நாடாளுமன்றத்துக்கு வருகிற 11–ந் தேதி தொடங்கி மே 19–ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
புதுடெல்லி,
நாடாளுமன்றத்துக்கு வருகிற 11–ந் தேதி தொடங்கி மே 19–ந் தேதி வரை 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ராணுவம், எல்லை பாதுகாப்பு படை போன்றவற்றில் பணிபுரியும் வீரர்கள் தபால் ஓட்டு மூலம் தேர்தலில் தங்கள் வாக்குகளை பதிவு செய்வது வழக்கம்.
அந்த வகையில் இந்த தேர்தலில் முதல் தபால் ஓட்டு அருணாசலபிரதேச மாநிலத்தில் பதிவானது. அங்கு லோகித்பூர் என்ற இடத்தில் விலங்குகள் பயிற்சி பள்ளியில் அமைக்கப்பட்டு இருந்த வாக்குச்சாவடியில், இந்திய திபெத்திய எல்லை பாதுகாப்பு படையில் பணிபுரியும் வீரர்கள் ஓட்டுச் சீட்டு மூலம் தங்கள் தபால் வாக்குகளை பதிவு செய்தனர்.