கட்சியை விட நாடு தான் முக்கியம் - பாஜக மூத்த தலைவர் அத்வானி
நாடுதான் எனக்கு முக்கியம், அடுத்தது கட்சி, கடைசியில் தான் எனது நலன் என பாஜக மூத்த தலைவர் அத்வானி கூறியுள்ளார்.;
புதுடெல்லி,
ஏப்ரல் 6-ம் தேதி பாஜக உதயமான நாளையொட்டி மூத்த தலைவர் எல்.கே.அத்வானி அறிக்கை:-
6 முறை என்னை வெற்றிப்பெறச்செய்த காந்திநகர் மக்களவை தொகுதி மக்களுக்கு நன்றி. நாடு தான் எனக்கு முதன்மையானது. அடுத்தது கட்சி கடைசியில் தான் சொந்த நலன். நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்த அனைவரும் ஒன்று சேர்ந்து உழைக்க வேண்டும். அரசியல் ரீதியாக மாறுபட்ட கருத்துடையவர்களை தேசவிரோதிகள் என்பது பாஜகவின் கொள்கையல்ல.
இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.