காங்கிரஸ் தேர்தல் அறிக்கை: வாக்காளர்களுக்கு பிரியங்கா வேண்டுகோள்

காங்கிரஸ் தேர்தல் அறிக்கை தொடர்பாக, வாக்காளர்களுக்கு பிரியங்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2019-04-02 22:15 GMT
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சி நேற்று தேர்தல் அறிக்கை வெளியிட்ட நிலையில், அதுபற்றி காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா கூறியதாவது:-

தயவுசெய்து தேர்தல் அறிக்கையை வாசிக்குமாறு ஒவ்வொருவரையும், குறிப்பாக இளைஞர்கள் மற்றும் முதல்முறையாக வாக்களிப்பவர்களை கேட்டுக்கொள்கிறேன். உண்மையான பிரச்சினைகள் பற்றியதாக இந்த தேர்தலை ஆக்குங்கள். இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்