கேரளாவில் பிரசாரம் செய்ய பா.ஜனதா தலைவர்கள் படையெடுப்பு
கேரளாவில் பிரசாரம் செய்ய பா.ஜனதா தலைவர்கள் படையெடுத்து வருகின்றனர்.
திருவனந்தபுரம்,
கேரளாவில் பா.ஜனதா தலைவர்கள் பலர் பிரசாரம் செய்ய உள்ளனர்.
கேரளாவில் உள்ள நாடாளுமன்ற தொகுதிகளில் 23-ந் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும் அங்கு போட்டியிடுகிறார்.
அதனால், கேரளாவில் பிரசாரத்துக்கு பா.ஜனதா முக்கியத்துவம் அளிக்கிறது. பா.ஜனதா மேலிட தலைவர்கள் பலர் அடுத்தடுத்து அங்கு பிரசாரத்துக்கு செல்கிறார்கள்.
கர்நாடக முன்னாள் முதல்-மந்திரி எடியூரப்பா, 8-ந் தேதி ஒரு பொது நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.
மத்திய மந்திரிகள் ஸ்மிரிதி இரானி, ஆர்.கே.சிங் ஆகியோர் 9-ந் தேதி கேரளாவில் பிரசாரம் செய்கிறார்கள். மத்திய வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் 11-ந் தேதியும், மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங் 13-ந் தேதியும் பிரசாரம் செய்கிறார்கள்.
மத்திய மந்திரி நிதின் கட்கரி 15-ந் தேதி கேரளாவில் பிரசாரம் செய்கிறார். ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 16-ந் தேதி பிரசாரம் செய்கிறார்.
மத்திய மந்திரி பியூஸ் கோயல் 19-ந் தேதியும், மத்திய மந்திரி முக்தார் அப்பாஸ் நக்வி 20-ந் தேதியும், உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் 21-ந் தேதியும் வாக்கு சேகரிக்கிறார்கள்.
பிரசாரத்துக்கு வரும் தலைவர்கள், பல்வேறு தொகுதிகளில் பா.ஜனதா செயல் வீரர்கள் கூட்டத்திலும் பங்கேற்று பேசுகிறார்கள்.