தேர்தல் பிரசாரத்தில் விலங்குகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் - ‘பீட்டா’ அமைப்பு வேண்டுகோள்

தேர்தல் பிரசாரத்தில் விலங்குகளை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு பீட்டா அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2019-04-01 20:26 GMT
புதுடெல்லி,

நாடாளுமன்ற தேர்தலையொட்டி நாடு முழுவதும் அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்த நிலையில் தேர்தல் பிரசாரங்களில் விலங்குகளை பயன்படுத்தக்கூடாது என்று அரசியல் கட்சிகளுக்கு ‘பீட்டா’ அமைப்பு வலியுறுத்தி உள்ளது. மேலும் அவ்வாறு விலங்குகளை பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்து உள்ளது.

விலங்குகளை பிரசாரத்தில் பயன்படுத்தி கொடுமை படுத்தினால் பொதுமக்கள் தேர்தல் கமிஷனுக்கு புகார் தெரிவிக்க வேண்டும் என்றும், அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கையை தேர்தல் கமிஷன் எடுக்க வேண்டும் என்றும் ‘பீட்டா’ அமைப்பின் இந்திய நிர்வாகி ஒருவர் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்