ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி பிரதமர்; உமரின் பேச்சுக்கு ஆதரவு அளிக்கிறீர்களா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி கேள்வி

ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என கூறும் உமரின் பேச்சுக்கு ஆதரவு அளிக்கிறீர்களா? என காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி கேள்வி விடுத்துள்ளார்.;

Update: 2019-04-01 14:57 GMT
ஜம்மு மற்றும் காஷ்மீரின் முன்னாள் முதல் மந்திரியான உமர் அப்துல்லா கூறும்பொழுது, மாநிலத்தின் அடையாளம் பாதுகாக்கப்பட ஜம்மு மற்றும் காஷ்மீருக்கு தனி பிரதமர் வேண்டும் என கூறினார்.  அந்த மாநிலத்திற்கு என அரசியலமைப்பு சட்ட பிரிவு 370ன்படி தனி அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது.

இச்சட்ட பிரிவை நீக்கும்படி பா.ஜ.க.வின் சில தலைவர்கள் விருப்பம் தெரிவித்து உள்ளனர்.  இதனை அடுத்து உமர் மேற்கூறியபடி பேசியுள்ளார்.

இந்த நிலையில் ஐதராபாத்தில் இன்று நடந்த தேர்தல் பேரணி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய பிரதமர் மோடி, உமர் அப்துல்லாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கின்றீர்களா என்பது பற்றி மகா கூட்டணி கட்சி தலைவர்கள் தெளிவுப்படுத்த வேண்டும் என காங்கிரஸ் மற்றும் மகா கூட்டணி கட்சிகளுக்கு கேள்வி விடுத்துள்ளார்.

மேலும் செய்திகள்