பெங்களூரு தெற்கு தொகுதியில் அனந்தகுமார் மனைவிக்கு வாய்ப்பு மறுப்பு
பெங்களூரு தெற்கு தொகுதியில் அனந்தகுமார் மனைவிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. பா.ஜனதா வேட்பாளராக 28 வயது இளைஞர் அறிவிக்கப்பட்டுள்ளார்.;
பெங்களூரு,
பெங்களூரு தெற்கு தொகுதியில் மறைந்த மத்திய மந்திரி அனந்தகுமாரின் மனைவி தேஜஸ்வினி போட்டியிடுவார் என்று பா.ஜனதா மாநில தலைவர் எடியூரப்பா அறிவித்து இருந்தார். இதையடுத்து தேஜஸ்வனி அனந்தகுமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் பெங்களூரு தெற்கு தொகுதி வேட்பாளராக 28 வயதே ஆகும் தேஜஸ்வி சூர்யா பெயரை பா.ஜனதா மேலிடம் திடீரென்று அறிவித்தது. தேஜஸ்வி சூர்யா, வேட்பாளராக அறிவிக்கப்பட்டது, பா.ஜனதாவினர் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தேஜஸ்வினி அனந்தகுமாருக்கு கடைசி நேரத்தில் வாய்ப்பு பறிப்போனது. இந்த நிலையில் பா.ஜனதா வேட்பாளர் தேஜஸ்வி சூர்யா, கடைசி நாளான நேற்று ஜெயநகரில் உள்ள தேர்தல் அலுவலகத்திற்கு சென்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தேஜஸ்வினி அனந்தகுமாருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதற்கு அவரது ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து கோஷங்களை எழுப்பினர்.