பா.ஜனதா கட்சியின் 2–வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு

பா.ஜனதா கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நேற்று அமித்ஷா தலைமையில், பிரதமர் மோடி முன்னிலையில் நடைபெற்றது.

Update: 2019-03-23 23:46 GMT

புதுடெல்லி, 

நாடாளுமன்ற தேர்தல் வேட்பாளர்களுக்கான 2–வது வேட்பாளர் பட்டியல்  இதில் அறிவிக்கப்பட்டது. மொத்தம் 64 தொகுதி வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.

பீகாரில் 17 வேட்பாளர்கள், ஆந்திராவில் 23 வேட்பாளர்கள், மராட்டியம், தெலுங்கானாவில் தலா 6 பேர், ஒடிசாவில் 5 பேர், உத்தரபிரதேசத்தில் 3 பேர் மற்றும் அசாம், கேரளா, மேகாலயா ஆகிய மாநிலங்களுக்கும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். இதில் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா (ஒடிசா), மத்திய மந்திரி ரவிசங்கர் பிரசாத் (பீகார்) முக்கியமானவர்கள். இத்துடன் பா.ஜனதா மொத்தம் 249 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்