சனி பகவான் கோவிலில் மோடி பிரதமராக பெண்கள் சிறப்பு யாகம்
நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் சார்பில் ஒருபுறம் பிரசாரங்கள் சூடுபிடித்து வரும் நிலையில், மறுபுறம் அவர்களின் வெற்றிக்காக ஆன்மிக தலங்களில் வழிபாடுகளும் நடந்து வருகின்றன
சூரத்,
பிரதமர் மோடிக்காக குஜராத்தில் சிறப்பு யாகம் தொடங்கி உள்ளது.
குஜராத்தின் சூரத் நகருக்கு அருகே கபோதரா பகுதியில் உள்ள சனி பகவான் கோவிலில் நேற்றும், இன்றும் என 2 நாட்களுக்கு 108 மகா யாகம் நடக்கிறது. நேற்று தொடங்கிய இந்த யாகத்தில் 532 பெண்கள் பங்கேற்றனர். இந்த யாகம் 2–வது நாளாக இன்றும் தொடர்ந்து நடக்கிறது.
குஜராத் மண்ணின் மைந்தரான பிரதமர் மோடி மிக அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராவதற்காக இந்த நிகழ்ச்சி நடந்து வருவதாகவும், இந்த யாகத்தில் பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுவதாகவும் யாக ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.