பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவராக உமா பாரதி அறிவிப்பு

பா.ஜ.க.வின் தேசிய துணை தலைவராக உமா பாரதி அறிவிக்கப்பட்டு உள்ளார்.

Update: 2019-03-23 16:37 GMT
புதுடெல்லி,

பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் மற்றும் முன்னாள் மத்திய மந்திரியாக பதவி வகித்தவர் உமா பாரதி (வயது 59).  இந்த முறை மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை.  இதனை அவர் முன்பே அறிவித்து விட்டார்.  இதுபற்றி மத்திய மந்திரி ஜே.பி. நட்டா இன்று கூறும்பொழுது, தேர்தலில் போட்டியிடவில்லை என உமாபாரதி தனது விருப்பத்தினை தெரிவித்து உள்ளார்.

அவர் கட்சிக்காக பணியாற்ற இருக்கிறார்.  இதனால் அவரை கட்சியின் தேசிய துணை தலைவராக அறிவிக்கின்றோம் என கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்