பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் யாசின் மாலிக்கின் ஜேகேஎல்எப் அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டது.;

Update: 2019-03-22 13:35 GMT
காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கின்  ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எப்) அமைப்புக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் இந்நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

ஜம்மு காஷ்மீரில் செயல்பட்டு வரும் ஜமாத்-இ-இஸ்லாமி ஜம்மு அன்ட் காஷ்மீர் அமைப்புக்கு மத்திய அரசு ஏற்கனவே தடை விதித்துள்ளது. புல்வாமா தாக்குதலை அடுத்து பிரிவினைவாத இயக்கங்கள் மீது அரசு அதிரடியான நடவடிக்கையை மேற்கொள்கிறது.

மேலும் செய்திகள்