மக்களை முட்டாள்கள் என நினைப்பதை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும்: பிரியங்கா காந்தி
மக்களை முட்டாள்கள் என நினைப்பதை பிரதமர் நிறுத்திக்கொள்ள வேண்டும் என்று பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். #LokSabhaElections2019
புதுடெல்லி,
காங்கிரஸ் கட்சியையும் வாரிசு அரசியல் பற்றியும் பிரதமர் மோடி கடுமையாக விமர்சித்து தனது பிளாக்கில் எழுதியிருந்தார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரியங்கா காந்தி மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.
பிரியங்கா காந்தி கூறியிருப்பதாவது:- கடந்த 5 ஆண்டுகளில் ஊடகம் உள்ளிட்ட நாட்டில் உள்ள அனைத்து அமைப்புகள் மீதும் பாஜகவும் பிரதமர் மோடியும் தாக்குதல் நடத்தி உள்ளனர். மக்களை முட்டாள்கள் என நினைத்து பேசுவதை பிரதமர் மோடி நிறுத்த வேண்டும். நடப்பது அனைத்தையும் மக்கள் உன்னிப்பாக கவனித்து வருகிறார்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” என்றார்.