சட்டீஸ்காரில் வெடிகுண்டு தாக்குதலில் 5 மத்திய ரிசர்வ் போலீசார் காயம்

சட்டீஸ்காரில் நடந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு தாக்குதலில் 5 மத்திய ரிசர்வ் போலீசார் காயம் அடைந்துள்ளனர்.

Update: 2019-03-18 13:17 GMT
தண்டேவாடா,

சட்டீஸ்காரில் தண்டேவாடா பகுதியில் நக்சலைட்டுகள் பதுங்கி உள்ளனர் என கிடைத்த தகவலால் அங்கு சென்று மத்திய ரிசர்வ் போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதில் நக்சலைட்டுகளுக்கும், போலீசாருக்கும் இடையே துப்பாக்கி சூடு நடந்தது.  இந்நிலையில், அங்கிருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்று திடீரென வெடித்துள்ளது.  இதில் மத்திய ரிசர்வ் போலீஸ் படையை சேர்ந்த 5 பேர் காயம் அடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்