2014-ல் ஏற்பட்ட மோடி அலை இப்போது சுனாமியாக உருவெடுத்துள்ளது - சாக்ஷி மகராஜ் எம்.பி. சொல்கிறார்
2014-ல் ஏற்பட்ட மோடி அலை இப்போது சுனாமியாக உருவெடுத்துள்ளது என சாக்ஷி மகராஜ் எம்.பி. தெரிவித்துள்ளார்.;
உன்னோவ்,
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த சர்ச்சை கருத்துகளை தெரிவித்துவரும் பா.ஜனதா எம்.பி. சாக்ஷி மகராஜ் கட்சி கூட்டத்தில் பேசும்போது கூறியதாவது:-
2014-ல் மோடி அலை உருவானது. அது 2019-ல் சுனாமியாக உருவெடுத்துள்ளது. அவர் மீண்டும் பிரதமராவதை யாராலும் தடுக்க முடியாது. 2024-ல் தேர்தல் இருக்காது என நான் உணர்கிறேன். இந்த ஒரு தேர்தல் மட்டுமே. அதற்காக நாம் நாட்டின் பெயரில் முழு நேர்மையுடன் போராடுகிறோம். சிலர் அனைத்து வித முயற்சிகளும் மேற்கொள்கிறார்கள். பிரியங்காவை அழைத்து வருகிறார்கள். கட்டாயப்படுத்தி கூட்டணி சேர்க்கிறார்கள். ஆனால் மக்கள் ஒவ்வொருவரும் மோடி என்றால் நாடு என்று சொல்கிறார்கள். இந்த தேர்தல் எந்த கட்சியின் பெயரிலோ அல்லது சாக்ஷி மகராஜ் பெயரிலோ நடைபெறவில்லை. நாட்டின் பெயரால் நடைபெறுகிறது. தேர்தல் முடிவு இதற்கு முன்பு இருந்ததைவிட சிறந்ததாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.