"மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்தி வருகிறீர்கள்" - தினத்தந்திக்கு, பிரதமர் மோடி பாராட்டு

வாக்களர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் தினத்தந்தி நாளிதழுக்கு, பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-13 11:03 GMT
சென்னை,

இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், மக்களின் விருப்பங்களை வெளிப்படுத்துவதற்காக தினத்தந்தி பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

தற்போது வாக்காளர்கள் மத்தியில் விழிப்புணர்வு அதிகரித்திருப்பது ஒரு வலுவான ஜனநாயகத்தில் முக்கியமானது எனவும் குறிப்பிட்டிருக்கிறார். தேர்தலில் மக்கள் அதிகளவில்  வாக்களிக்க அவர்களை ஊக்கப்படுத்த  வேண்டும் எனவும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். 

முன்னதாக, கடந்த 2016-ம் ஆண்டு நடைபெற்ற தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மிகச்சிறப்பாக செயல்பட்ட மின்னணு ஊடகமாக தந்தி டிவி தேர்வு செய்யப்பட்டது. இதற்கான தேசிய ஊடக விருதை அப்போதைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி , தினத்தந்தி குழுமத்தின் நிர்வாக இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தனுக்கு வழங்கியது குறிப்பிடதக்கது.

மேலும் செய்திகள்