குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா - பா.ஜனதாவில் இணைந்தார்

குஜராத்தில் மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ. ராஜினாமா செய்து பா.ஜனதாவில் இணைந்தார்.

Update: 2019-03-11 21:15 GMT
ஆமதாபாத்,

குஜராத்தில் காங்கிரஸ் சார்பில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து பா.ஜனதாவுக்கு தாவி வருகின்றனர். இதில் சமீபத்திய நிகழ்வாக கடந்த 8-ந்தேதி கூட 2 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பா.ஜனதாவில் இணைந்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று மேலும் ஒருவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். ஜாம்நகர் (ஊரகம்) தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட வல்லப் தரவியா என்ற அந்த எம்.எல்.ஏ. தனது ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் வழங்கினார். எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த அவர், காங்கிரசில் இருந்து விலகி பா.ஜனதாவில் இணைந்தார். பா.ஜனதாவால் மட்டுமே மக்களுக்கு நல்வாழ்வை அளிக்க முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

4 நாட்களில் 3 எம்.எல்.ஏ.க்கள் விலகியிருப்பது காங்கிரசுக்கு பின்னடைவாக கருதப்படுகிறது. இவரையும் சேர்த்து காங்கிரசில் இருந்து விலகிய எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. இதைத்தவிர வழக்கு ஒன்றில் 2 ஆண்டு சிறைத்தண்டனை பெற்ற பக்வன் பரத் என்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ. தகுதி நீக்கம் செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்