திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பெண் விமானிக்கு பாலியல் தொல்லை
திருவனந்தபுரம் விமான நிலையத்தில் பெண் விமானிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
திருவனந்தபுரம்,
டெல்லியை சேர்ந்த 26 வயதான பெண் விமானி ஒருவர், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் தனது விமானத்தின் வருகைக்காக காத்திருந்தார். அப்போது அங்கு நின்றிருந்த ஒரு கார் டிரைவர் அந்த விமானியிடம் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார். பின்னர் தனது காரில் ஏறி தப்பிச்சென்றார்.
இந்த சம்பவம் குறித்து விமான நிலைய அதிகாரியிடம் இளம்பெண் விமானி புகார் செய்தார். பின்னர் இது தொடர்பாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் கார் டிரைவர் மீது வழக்கு பதிவு செய்த போலீசார், கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் அவரை கைது செய்ததாக தகவல் வெளியாகி உள்ளது.