அயோத்தி மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீரவிசங்கருக்கு இடம்: ஓவைசி எதிர்ப்பு

அயோத்தி விவகாரத்தை சமரசமாக தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீரவிசங்கர் இடம் பெற்றதற்கு ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

Update: 2019-03-08 07:44 GMT
ஐதராபாத்,

அயோத்தி விவகாரத்தை சமரசமாக தீர்த்துக்கொள்ள மத்தியஸ்தர் குழுவை அமைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 3 பேர் கொண்ட மத்தியஸ்தர்கள் குழுவில், வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், வழக்கறிஞர் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் இடம் பெறுவர் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த நிலையில், அயோத்தி பிரச்சினையை தீர்க்கும் மத்தியஸ்தர் குழுவில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் நியமிக்கப்பட்டுள்ளதற்கு அசாதுதின் ஓவைசி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 

இது குறித்து ஓவைசி கூறும் போது, மத்தியஸ்தர் குழுவில் இடம் பெற்றுள்ள ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர்  அயோத்தி பிரச்சினையில் தங்கள் உரிமையை முஸ்லீம்கள் கைவிடாவிட்டால் இந்தியா சிரியாவாக மாறும் என்று தெரிவித்து இருந்தார். எனவே, நடுநிலையான ஒருவரை உச்ச நீதிமன்றம் நியமித்தால் சிறப்பாக இருக்கும்” என்றார். 

மேலும் செய்திகள்