பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது -இந்திய விமானப்படை

பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ள இந்திய விமானப்படை தயார் நிலையில் உள்ளது என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

Update: 2019-03-07 15:03 GMT
புதுடெல்லி,

காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில் உள்ள நவ்செரா எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அதிகாலையில் இந்திய ராணுவ நிலைகள் மீதும், மக்கள் வசிக்கும் வீடுகள் மீதும் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. அதே மாவட்டத்தில் சுந்தர்பானி பகுதியிலும் நேற்று காலை பாகிஸ்தானின் அத்துமீறல் தொடர்ந்தது.

இதேபோல் பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகாட்டி பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் நேற்று அதிகாலையில் தொடர் தாக்குதல் நடத்தியது. துப்பாக்கி சூடு, சிறிய ரக பீரங்கி தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தான் ராணுவத்துக்கு இந்திய பாதுகாப்பு படையினர் பதிலடி கொடுத்தனர். இந்த சம்பவங்களில் இந்திய தரப்பில் ஒரு வீரர் காயம் அடைந்தார். காஷ்மீரில் ஒரே நாளில் 3 முறை பாகிஸ்தான் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்நிலையில் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளதாகவும், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் விமானப்படையின் அத்துமீறல் உள்ளதா என்பது கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.

மேலும் செய்திகள்