பகிரங்கமாக வெளியிட்டது, சட்டப்படி குற்றம்: ராணுவ அமைச்சகத்தில் இருந்து ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டன - சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தகவல்
ராணுவ அமைச்சகத்தில் இருந்து ரபேல் ஆவணங்கள் திருடப்பட்டு, ஆங்கில பத்திரிகையில் வெளியிடப்பட்டுள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு கூறியது. இது, அரசாங்க ரகசிய சட்டப்படி குற்றம் என்றும் தெரிவித்தது.;
புதுடெல்லி,
இந்திய விமானப்படைக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த டசால்ட் ஏவியேசன் நிறுவனத்திடம் இருந்து ரபேல் போர் விமானங்கள் வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டது.
விமானங்களுக்கான விலை, முந்தைய காங்கிரஸ் ஆட்சிக்காலத்தில் பேசியதை விட அதிகம் என்றும், விமானம் தயாரிப்பதற்கான இந்திய பங்குதாரராக அனில் அம்பானி நிறுவனத்தை தேர்வு செய்ததில் முறைகேடு நடந்திருப்பதாகவும் குற்றம் சாட்டி சுப்ரீம் கோர்ட்டில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால், விலை விஷயத்தில் தாங்கள் திருப்தி அடைவதாகவும், ஒப்பந்தத்தில் எந்த முறைகேடும் நடக்கவில்லை என்றும் கூறி, அனைத்து மனுக்களையும் கடந்த டிசம்பர் 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது.
இந்த தீர்ப்பை சீராய்வு செய்யக்கோரி, முன்னாள் மத்திய மந்திரிகள் யஷ்வந்த் சின்கா, அருண் ஷோரி, வக்கீல் பிரசாந்த் பூஷண் ஆகியோர் சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனு, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.கே.கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வக்கீல் பிரசாந்த் பூஷண், ஒரு ஆங்கில பத்திரிகையில் ரபேல் ஆவணங்கள் வெளியிடப்பட்டு இருப்பதாக கூறி, தனது வாதத்தை தொடங்கினார். ரபேல் ஒப்பந்தம் தொடர்பான முக்கியமான உண்மைகளை மத்திய அரசு மறைத்து விட்டதாகவும், இல்லாவிட்டால், ரபேல் ஒப்பந்தத்துக்கு எதிரான மனுக்களை டிசம்பர் 14-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்திருக்காது என்றும் அவர் கூறினார்.
அதற்கு மத்திய அரசு சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் கடும் ஆட்சேபனை தெரிவித்தார். அவர் கூறியதாவது:-
அந்த ஆவணங்களைத்தான் மனுதாரர்கள் நம்பி இருக்கிறார்கள். ஆனால் அவை ராணுவ அமைச்சகத்தில் இருந்து திருடப்பட்டவை. பொதுமக்கள் பார்வைக்கு வெளியிடப்படக்கூடாது என்பதற்காக, ‘ரகசியம்’ என்று வகைப்படுத்தப்பட்டு இருந்தன. அவற்றை வெளியிட்ட ஆங்கில நாளிதழ், ‘ரகசியம்’ என்ற வார்த்தையை மட்டும் விட்டுவிட்டு வெளியிட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டில் இந்த சீராய்வு மனு விசாரணைக்கு வரும் நாளில், திருட்டு ஆவணங்களை வெளியிட்டது, கோர்ட்டு விசாரணையை திசைதிருப்புவதை நோக்கமாக கொண்ட செயல். ஆகவே, இது கோர்ட்டு அவமதிப்பு ஆகும். மேலும், பொதுமக்கள் பார்வைக்கு அந்த ஆவணங்களை வெளியிட்டவர்கள், அரசாங்க ரகசியங்கள் சட்டப்படி குற்றவாளிகள் ஆவர். இவ்வாறு அட்டார்னி ஜெனரல் கூறினார்.
அப்போது, தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் குறுக்கிட்டு, “வக்கீல் பிரசாந்த் பூஷணின் வாதத்தை கேட்பதால், அந்த ஆவணங்களை கோர்ட்டு பதிவு செய்து கொண்டதாக அர்த்தம் அல்ல. ஆவணங்கள் திருட்டு விஷயத்தில் மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது என்று கூறுங்கள்?” என்று அட்டார்னி ஜெனரலை பார்த்து கேட்டார்.
அதற்கு அட்டார்னி ஜெனரல், “இதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்படவில்லை. ஆனால், விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினார்.
அட்டார்னி ஜெனரல் மேலும் கூறியதாவது:-
ரபேல் ஒப்பந்தம் என்பது, ராணுவ தளவாடங்கள் கொள்முதல் தொடர்பானது. இது கோர்ட்டு ஆய்வுக்கு உட்பட்டது அல்ல. எனவே, இந்த சீராய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்.
கடந்த வாரம் பாகிஸ்தானுடன் மோதல் ஏற்பட்டது. பாகிஸ்தானின் எப்-16 ரக போர் விமானங்களை எதிர்கொள்ள ரபேல் போர் விமானம் தேவைப்படுகிறது.
ரபேல் இல்லாமல் அந்த விமானங்களை எதிர்க்க முடியாது. பறக்கும் நிலையில், 2 ரபேல் போர் விமானங்கள் வர உள்ளன. முதலாவது விமானம், செப்டம்பர் மாதம் வருகிறது. இவ்வாறு அவர் வாதிட்டார்.
பின்னர், அடுத்தகட்ட விசாரணையை 14-ந்தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
ஆம் ஆத்மி பிரமுகர் சஞ்சய் சிங் என்பவரும் சீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். ஆனால், அவர் சுப்ரீம் கோர்ட்டு பற்றி தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்ததால், அவரது மனுவை விசாரிக்க மாட்டோம் என்று நீதிபதிகள் கூறிவிட்டனர்.