டெல்லி விமானத்தில் நடுவானில் திடீர் கோளாறு - உடனே திரும்பியதால் 220 பயணிகள் தப்பினர்
டெல்லி விமானத்தில் நடுவானில் திடீர் கோளாறு ஏற்பட்டது. உடனடியாக திரும்பியதால் 220 பயணிகள் உயிர் தப்பினர்.;
புதுடெல்லி,
டெல்லி விமான நிலையத்தில் இருந்து நேற்று மதியம் 1.35 மணிக்கு ஜெர்மனியின் பிராங்க்பர்ட் நகருக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 220 பயணிகள் இருந்தனர். அந்த விமானம் புறப்பட்ட 15-வது நிமிடத்தில் 20 ஆயிரம் அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்தது. அப்போது விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது.
இதனால் விமானி உடனே விமானத்தை மீண்டும் டெல்லி விமான நிலையத்துக்கே கொண்டுவந்தார். இதில் எந்த பயணிக்கும் காயமோ, பாதிப்போ ஏற்படவில்லை. இன்று (வியாழக்கிழமை) காலை 6 மணிக்கு வேறு ஒரு விமானம் மூலம் இந்த பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று விமான நிறுவனம் அறிவித்தது.