இந்திய விமானப்படை தாக்குதல்; 300 செல்போன்களை பயன்படுத்தியது மரங்களா? -ராஜ்நாத் சிங் கேள்வி

இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய பாலகோட்டில் 300 செல்போன்களை பயன்படுத்தியது மரங்களா? என ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2019-03-05 15:50 GMT
இந்திய விமானப்படைகள் பாகிஸ்தானின் பால்கோட்டில்  தாக்குதல் நடத்துவதற்கு முன்பாக, அந்த பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தொலைபேசி இணைப்புகள் செயல்பட்டு கொண்டிருந்ததாக தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு உறுதி செய்ததாக தகவல் வெளியாகியது. இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் இந்தியா மரங்களை அழித்து சுற்றுசூழல் பயங்கரவாதத்தில் ஈடுபட்டுள்ளது என ஐ.நா.வில் புகார் அளித்தது.

ஜெய்ஷ் பயங்கரவாத இயக்கம் இந்தியாவின் தாக்குதலை ஒப்புக்கொண்டது.  இந்நிலையில் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்திய பாலகோட்டில் 300 செல்போன்களை பயன்படுத்தியது மரங்களா? என ராஜ்நாத் சிங் கேள்வி எழுப்பியுள்ளார்.  
 
அசாம் மாநிலம் துப்ரியில் இந்திய எல்லைப் பாதுகாப்பு படைகளுக்காக கண்காணிப்பு அமைப்பை தொடங்கி வைத்த ராஜ்நாத் சிங் பேசுகையில், “தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு 300 மொபைல் இணைப்புகள் அங்கு செயல்பட்டது என தெரிவித்தது. அவையனைத்தும் மரங்களால் பயன்படுத்தப்பட்டதா? உங்களுக்கு தேசிய தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பு மீதும் நம்பிக்கையில்லையா?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் செய்திகள்