நாடாளுமன்ற தேர்தலிலும் ஜனதா தளம்(எஸ்), காங்கிரஸ் கூட்டணி தொடரும் - தேவேகவுடா
நாடாளுமன்ற தேர்தலிலும் ஜனதா தளம்(எஸ்), காங்கிரஸ் கூட்டணி தொடரும் என்று முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
முன்னாள் பிரதமரும், ஜனதா தளம்(எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கர்நாடகத்தில் ஜனதா தளம்(எஸ்) கட்சியும், காங்கிரஸ் கட்சியும் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. தற்போது இந்த கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும்.
நாங்கள் காங்கிரஸ் கட்சியுடன் தொகுதி பங்கீடு குறித்து ஆலோசித்து வருகிறோம். தொகுதி ஒதுக்கீடு குறித்து 10 நாட்கள் அல்லது ஒரு வாரத்தில் வெளியிடப்படும்.
மாநிலத்தில் தற்போது நடந்து வரும் கூட்டணி ஆட்சி நன்றாக நடைபெற்று வருகிறது. மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
அதனால் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணியை கர்நாடக மக்கள் ஆதரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.