காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேசுக்கு டெல்லி கோர்ட்டு சம்மன்

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேசுக்கு டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.;

Update: 2019-03-02 18:45 GMT
புதுடெல்லி,

தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் மகன் விவேக் தோவல், கேரவான் செய்திப் பத்திரிகை தனக்கு அவதூறு ஏற்படுத்தும் வகையில் கட்டுரை வெளியிட்டதாக கூறியதுடன், அந்த பத்திரிகைக்கு எதிராக கிரிமினல் அவதூறு வழக்கு மற்றும் அத்துடன், சம்பந்தப்பட்ட கட்டுரையை எழுதிய கெளஷல் ஷ்ரோப், அதை அடிப்படையாகக் கொண்டு செய்தியாளர்கள் சந்திப்பு நடத்திய காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் ஆகியோருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கு விசாரணை தொடர்பாக வரும் ஏப்ரல் 25-ம் தேதி ஜெய்ராம் ரமேஷ் ஆஜராக டெல்லி கோர்ட்டு சம்மன் அனுப்பி உள்ளது.

மேலும் செய்திகள்