சின்னதம்பி தொடர்பான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டு விசாரிக்க மறுப்பு

கோவை வனப்பகுதியில் இருந்து ஊருக்குள் நுழைந்துள்ள சின்னதம்பி யானையை, பிடித்து முகாமில் அடைக்க வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில் ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.;

Update: 2019-03-01 23:15 GMT

புதுடெல்லி,

வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு உத்தரவில் தீர்ப்பில் ‘சின்னதம்பி யானையை பத்திரமாக முகாமில் அடைக்க வேண்டும் என்றும் அந்த யானையை முகாமில் அடைத்து பயிற்சி வழங்குவதா? அல்லது வனப்பகுதிக்குள் மீண்டும் கொண்டு செல்வதா? என்பது குறித்து பின்னர் முடிவு செய்யப்படும் என்றும் உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவுக்கு எதிராக இந்தியாவில் விலங்குகளுக்கான மக்கள் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவின் மீதான விசாரணை நேற்று நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, சஞ்ஜய் கி‌ஷண் கவுல் அமர்வில் நடைபெற்றது.

விசாரணை தொடங்கியதும் நீதிபதிகள் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்க மறுத்தனர். மேலும் மனுதாரர் மனுவை வாபஸ் பெற்றுக்கொண்டு ஐகோர்ட்டை அணுகலாம் என்றும் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்