வங்கி கணக்குடன் ஆதாரை இணைக்கலாம் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல்
வங்கி கணக்கு தொடக்கம், சிம் கார்டு வாங்குவதற்கு உள்ளிட்ட அரசு நல உதவிக்கு அடையாள ஆவணமாக ஆதாரை இணைக்கலாம் என்ற மசோதா நாடாளுமன்ற மக்களவையில் நிறைவேறியது.
புதுடெல்லி,
மாநிலங்களவையில் அந்த மசோதா நிறைவேறுவதற்குள் நாடாளுமன்ற கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது. இதையடுத்து அந்த மசோதா காலாவதியாகாமல் இருக்க அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் மத்திய சட்டத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்ட மத்திய மந்திரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் ஆதார் அவசர சட்டத்துக்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.