இந்திய அதிகாரிகளிடம் விமானப்படை வீரர் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார்!

இந்திய அதிகாரிகளிடம் விமானப்படை வீரர் அபிநந்தன் ஒப்படைக்கப்பட்டார். அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெறுகிறது.;

Update: 2019-03-01 12:18 GMT
புதுடெல்லி,

பாகிஸ்தானில் இருந்து விடுவிக்கப்படும் விமானப்படை வீரர் அபிநந்தன்  ராவல்பிண்டி ராணுவ முகாமில் இருந்து லாகூருக்கு விமானத்தில் அழைத்து வரப்பட்டார். பின்னர் லாகூரில் இருந்து சாலை மார்க்கமாக வாகா எல்லை வழியாக இந்தியா அழைத்து வரப்பட்டார்.

வாகா எல்லையில்அபிநந்தனை வரவேற்க இந்திய மக்கள் குவிந்து இருந்தனர். 

இந்தியா மற்றும் பாகிஸ்தான் எல்லை பகுதியில் இருந்து 1 கி.மீட்டர் தொலைவில் மக்கள் நாட்டுப்பற்று பாடல்களுடன், பாரத் மாதா கி ஜெய் என்ற கோஷங்களை எழுப்பியபடி உள்ளனர்.

பஞ்சாப் போலீஸ் அதிகாரிகள் அதிக அளவில் இந்த பகுதியில் குவிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.

வாகா எல்லை வந்தடைந்த அபிநந்தன், இந்திய அதிகாரிகளிடம்  ஒப்படைக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்