காஷ்மீரில் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு : நீண்ட வரிசையில் மக்கள்; போலீஸ் பாதுகாப்புடன் வினியோகம்

காஷ்மீரில் எல்லைப்பகுதியில் போர் பதற்றம் நிலவி வருகிறது. அத்துடன் அங்கு பெட்ரோல், டீசலுக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவுகிறது.;

Update: 2019-02-28 22:30 GMT

ஸ்ரீநகர்,

ஸ்ரீநகரிலும் அதையொட்டிய புறநகர்களிலும் பெட்ரோல் நிலையங்களில், தங்கள் வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் மக்கள் காத்திருக்கின்றனர்.

பெட்ரோல், டீசலை கேன்களில் வாங்கி சென்று இருப்பு வைப்பதிலும் ஒருசிலர் முனைப்பாக இருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

ஆனால் இப்படி கேன்கள் மற்றும் பிற கன்டெய்னர்களில் எரிபொருட்கள் வாங்கிச்செல்வதற்கு தடை விதிக்கும் வகையில், ஸ்ரீநகர் மாவட்ட கலெக்டர் சகீத் இக்பால் சவுத்ரி, குற்றவியல் நடைமுறைச் சட்டம் பிரிவு 144–ஐ அமல்படுத்தி உள்ளார்.

இதன்மூலம் கேன்களில் பெட்ரோல், டீசல் வாங்கிச்செல்வது தடை செய்யப்பட்டு இருக்கிறது.

இதற்கிடையே ஸ்ரீநகரில் 3 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருப்பதாக சபீர் அகமது என்பவர் கூறினார்.

பல இடங்களில் பெட்ரோல் நிலையங்களில் போலீசாரை நிறுத்தி கூட்டத்தை ஒழுங்குபடுத்தி பெட்ரோல், டீசல் வினியோகம் நடந்து வருகிறது.

மேலும் செய்திகள்