7-வது நாளாக போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை முடித்தார்

7-வது நாளாக போராட்டம் நடத்திய அன்னா ஹசாரே உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.;

Update: 2019-02-05 15:39 GMT
மத்தியில் லோக்பால், மராட்டியத்தில் லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த கோரியும், வேளாண் விஞ்ஞானி சுவாமிநாதன் கமிஷன் பரிந்துரையின்படி விவசாயிகளின் விளைபொருளுக்கு உரிய விலை வழங்கக்கோரியும் கடந்த புதன்கிழமை முதல் அகமத் நகர் மாவட்டத்தில் உள்ள தனது சொந்த கிராமமான ராலேகான் சித்தியில் காந்தியவாதி அன்னா ஹசாரே உண்ணாவிரதம் தொடங்கினார்.  இவரின் போராட்டம் 7-வது நாளாக நீடித்தது. உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ள 81 வயது அன்னா ஹசாரேவின் உடல்நிலையை டாக்டர்கள் பரிசோதித்தனர். அவர் 6 நாட்களில் 4.25 கிலோ எடை குறைந்துள்ளதாக தெரிவித்தனர். 

மேலும் தொடர் உண்ணாவிரதம் காரணமாக அவரது ரத்த அழுத்தம் அதிகரித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் அன்னா ஹசாரே தன்னுடைய உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக்கொண்டார். மராட்டிய மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அவருடைய கோரிக்கைகளை ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்ததை அடுத்து உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். 

மேலும் செய்திகள்