நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான கவுரவ படைகளை ராகுல் அழித்திடுவார்; ஏ.கே. அந்தோணி பேச்சு

நாடாளுமன்ற தேர்தலில் மோடி தலைமையிலான கவுரவ படைகளை ராகுல் காந்தி அழித்திடுவார் என முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி கூறியுள்ளார்.

Update: 2019-02-04 13:49 GMT
காசர்கோடு,

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கேரளாவின் காசர்கோடு நகரில் காங்கிரஸ் கட்சியின் பேரணி ஒன்றை முன்னாள் மத்திய மந்திரி ஏ.கே. அந்தோணி தொடங்கி வைத்தபின், மக்களவை தேர்தல் என்பது நாட்டை காப்பதற்காக மேற்கொள்ளப்படும் ஒரு போர் என கூறினார்.

அவர் தொடர்ந்து, இந்த வருடம் நடைபெற உள்ள தேர்தல் மற்ற நாடாளுமன்ற தேர்தல் போன்றது அல்ல.  2019 மக்களவை தேர்தலானது 2வது குருஷேத்திர போர் ஆகும்.  இதில், நரேந்திர மோடி தலைமையிலான கவுரவர் படைகளை ராகுல் காந்தி அழித்திடுவார்.

இந்த போரானது நாட்டையும், அரசியலமைப்பினையும் காப்பதற்காக நடத்தப்படுகிறது.  அரசியலமைப்பின் ஒழுங்குகள் மற்றும் மதிப்புகள், அரசியலமைப்பின் நிறுவனங்கள் மற்றும் நாடு சந்தித்து வரும் பிற அச்சுறுத்தல்களுக்கான போர் என அவர் பேசினார்.

மேலும் செய்திகள்