ஜார்கண்டில் பஸ் விபத்தில் 5 பேர் பலி

ஜார்கண்டில் நிகழ்ந்த பஸ் விபத்தில் 5 பேர் பரிதாபமாக பலியாயினர்.;

Update: 2019-02-03 18:17 GMT
தியோகர்,

ஜார்கண்ட் மாநிலம் தும்கா மாவட்டத்தில் நடைபெற்ற ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கூட்டத்தில் பக்மாரா கிராமத்தைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். பின்னர், அவர்கள் பஸ்சில் ஊருக்கு திரும்பி சென்றனர். தியோகர் அருகே பஸ் வந்த போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து, நிலைதடுமாறி மரத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த 5 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர். மேலும், 32 பேர் படுகாயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, மருத்துவமனையில் சேர்த்தனர். இதுபற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்