வேலைக்கு செல்லும் பெண்களுக்கு பிரசவ விடுப்பு 26 வாரம்
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 26 வாரம் பிரசவ விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.;
புதுடெல்லி,
மத்திய பாரதீய ஜனதா கூட்டணி அரசு, பெண்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது.
குறிப்பாக, பிரதம மந்திரி முத்ரா யோஜனா திட்டத்தின் கீழ் புதிய தொழில் தொடங்குவதற்காக கடன் பெறுவோரில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரதம மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா என்கிற திட்டத்தின்கீழ் அனைத்து கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மாருக்கு பல்வேறு சலுகைகள் வழங்கப்படுகின்றன.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு 26 வாரம் பிரசவ விடுமுறை தரப்படுகிறது. வேலை செய்வதற்கு அதிகாரம் வழங்குவதுடன் நிதி உதவியும் வழங்கப்படுகிறது.
இந்த தகவலை பட்ஜெட் உரையில் நிதி மந்திரி பியூஸ் கோயல் குறிப்பிட்டார்.