சென்னை கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகள் - மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல்

சென்னை கடற்கரையில் பிளாஸ்டிக் குப்பைகள் அதிகமாக இருந்ததாக, மாநிலங்களவையில் மத்திய மந்திரி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-02 19:45 GMT
புதுடெல்லி,

மாநிலங்களவையில் சுற்றுச்சூழல் மந்திரி மகேஷ் சர்மா எழுத்துமூலம் அளித்துள்ள பதில் வருமாறு:-

பல்வேறு கடற்கரை பகுதிகளில் தேசிய கடற்கரை ஆராய்ச்சி மையம் ஆய்வு நடத்தியதில் பெரும்பாலான மீன்பிடி துறைமுகங்கள், மீனவ கிராமங்கள் அருகில் உள்ள கடற்கரைகளில் அதிக குப்பைகள் சேர்ந்துள்ளது தெரியவந்துள்ளது. முக்கிய மீன்பிடி மாநிலமான கேரளாவில் குறிப்பாக கொச்சி துறைமுகத்திலும், கர்நாடகாவின் கார்வாரிலும் மீன்பிடி வலைகளில் பயன்படுத்தக்கூடிய மக்காத நைலான் இழைகள் அதிகமாக காணப்பட்டன.

சுற்றுலாதலமான சென்னை எலியட்ஸ் கடற்கரையில் 40 சதவீதமும், ஒடிசாவின் கோபால்பூர் கடற்கரையில் 96 சதவீதமும் பிளாஸ்டிக் குப்பைகள் இருந்தன. ஓட்டல்கள் மற்றும் சிறு வியாபாரிகளால் வழங்கப்படும் பிளாஸ்டிக் பைகள், குடிநீர் பாட்டில்கள், உணவுபொருள் பைகள், ஸ்டிராக்கள், டீ கப்புகள் போன்றவை இருந்தன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

மேலும் செய்திகள்