காங்கிரசில் இருந்து விலகி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியில் சேரப்போகும் அசாருதீன்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அசாருதீன் காங்கிரசில் இருந்து விலகி தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2019-01-02 07:32 GMT
ஐதராபாத்,

தெலுங்கானா காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவரும், இந்திய கிரிக்கெட்  அணியின் முன்னாள் கேப்டனுமான  முகமது அசாருதீன்  காங்கிரசில்  இருந்து விலகி  தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியில் சேரப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும்  தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி  சார்பில் அவர் செகந்திராபாத் தொகுதியில் போட்டியிடப்போவதாகவும் கூறப்படுகிறது.

சமீபத்தில் தான் சட்டமன்ற தேர்தல்களுக்கு முன்பு கட்சியில் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியில் அசாருதீனுக்கு மாநில காங்கிரஸ் காரிய கமிட்டி தலைவர் பதவி வழங்கப்பட்டது.

காங்கிரஸ் அவரை மல்காஜ்கிரிய மக்களவை தொகுதியில் போட்டியிட  வைக்க திட்டமிட்டு இருந்தது. ஆனால் அவர் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி கட்சியில் சேரப்போவதாக  வரும் தகவலை கேட்டு அதிர்ச்சி அடைந்து உள்ளது.

மஜ்லீஸ் இ முஸ்லீமின் தலைவர் அசாதுதீன் ஒவைசி அசாருதீனின் நெருங்கிய நண்பர் ஆவார். 3 நாட்களுக்கு முன் அசாருதீன்  ஒவைசியின் மகள் திருமணத்தில் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்ச்சியில்  தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் , அவரது மகன்  கே.டி. ராமாராவ், மகளும் எம்.பி.யுமான கவிதா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த சந்தர்ப்பத்தில் அசாருதீன் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதியில் சேர தனது விருப்பத்தை வெளிப்படுத்தி இருப்பார் என்று நம்பப்படுகிறது.

2009 ஆம் ஆண்டில் அசாருதீன் காங்கிரஸில் சேர்ந்தார், மொராதாபாத்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்