ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டத்தில் 100 நாட்களில் 6.85 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை - மத்திய மந்திரி அருண் ஜெட்லி தகவல்

ஆயுஷ்மான் மருத்துவ காப்பீடு திட்டத்தில், 100 நாட்களில் 6.85 லட்சம் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது என்று மத்திய மந்திரி அருண் ஜெட்லி தகவல் தெரிவித்துள்ளார்.

Update: 2019-01-01 23:15 GMT
புதுடெல்லி, 

பிரதமர் நரேந்திர மோடி கடந்த செப்டம்பர் மாதம் 23-ந் தேதி ஆயுஷ்மான் பாரத் என்ற மருத்துவ காப்பீடு திட்டத்தை தொடங்கிவைத்தார். இதன்மூலம் ஏழை மக்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை பெற வழி வகுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய மந்திரி அருண் ஜெட்லி சமூக வலைத் தளத்தில், “இந்த திட்டம் தொடங்கப்பட்டு 100 நாட்களில் 6.85 லட்சம் ஏழை நோயாளிகளுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஒரு நாளைக்கு சராசரியாக 5 ஆயிரம் காப்பீட்டு தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டம் பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்கும்போது ஆண்டுதோறும் ஒரு கோடிக்கும் அதிகமான குடும்பங்கள் பயன்பெறும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்