அனாதையாக கிடந்த குழந்தைக்கு தாய்ப்பால் ஊட்டிய, பெண் போலீஸ் - பாராட்டுகள் குவிகின்றன
போலீஸ் நிலையத்துக்கு கொண்டுவரப்பட்ட குழந்தை அழுது கரைந்தது. பெண் போலீஸ் ஒருவர் தாயுள்ளத்துடன் தாய்ப்பால் கொடுத்து அழுகையை அமர்த்தினார்.
ஐதராபாத்,
போலீஸ்காரர்கள் என்றாலே கடுமையானவர்கள், கொடுமையானவர்கள் என்றுதான் பலருக்கும் எண்ணத் தோன்றும். ஆனால் அப்படி இல்லை. கல்லுக்குள் ஈரம் போல் அவர்களுக்குள்ளும் இரக்கமும், கருணையும் இருக்கும் என்பதை கீழே காணும் நிகழ்வு நமக்கு சொல்லும்.
ஐதராபாத்தில் இருக்கும் உஸ்மானியா பொது மருத்துவமனை அருகே சம்பவத்தன்று இரவு இர்பான் என்பவர் நின்றுகொண்டு இருந்தார். அவர் அருகில் ஒரு இளம்பெண் வந்தாள். அவள் அணிந்து இருந்த உடை அழுக்காக இருந்தது. கைக்குழந்தை வைத்து இருந்தாள். அய்யா இந்த குழந்தையை கொஞ்சம் வைத்திருங்கள். குடிக்க தண்ணீர் கொண்டுவரப்போகிறேன். வந்ததும் வாங்கிக் கொள்கிறேன் என்று கனிவாக சொன்னாள். இர்பானுக்கு இரக்கம் ஏற்பட்டது. “சரிம்மா, கொடு” என்று குழந்தையை கையில் வாங்கிக் கொண்டார்.
பால்வடியும் அந்த குழந்தையின் முகம் அழகாக இருந்தது. குழந்தையை ரசித்துக்கொண்டே கொஞ்ச நேரம் அங்கேயே நின்றார். குடிநீர் பிடிப்பதாக சொல்லிச் சென்ற பெண், நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை. குழந்தை அழத்தொடங்கிவிட்டது. அது, இது என்று சொல்லி ஏமாற்றி குழந்தையின் அழுகையை நிறுத்த முயன்றார். நடக்கவில்லை. அந்த பெண்ணும் திரும்பிவரவில்லை.
இர்பானுக்கு தர்மசங்கடமாக இருந்தது. குழந்தையை தன்னுடைய வீட்டுக்கு கொண்டுசென்றார். பசியால்தான் குழந்தை அழுகிறது என்பதை உணர்ந்த அவர், பாக்கெட் பால் வாங்கி வந்து காய்ச்சி, குழந்தைக்கு ஊட்ட முயன்றார். அதுவும் முடியவில்லை. குழந்தை குடிக்காமல் அடம்பிடித்து, தொடர்ந்து அழுது கரைந்தது.
இதனால் வேறு வழி இல்லாமல், இர்பான் அருகில் இருந்த போலீஸ் நிலையத்துக்கு குழந்தையை எடுத்துச் சென்றார். நடந்த விவரத்தை சொல்லி குழந்தையை அவர்களிடம் ஒப்படைத்துச் சென்றார்.
குழந்தையின் அழுகை ஓய்ந்தபாடு இல்லை. அப்போது பணியில் ரவீந்தர் என்ற போலீஸ்காரர் இருந்தார். கதறி அழும் குழந்தையை பார்த்து அவருக்கு பரிதாபம் ஏற்பட்டது. அவருடைய மனைவி பிரியங்காவும் ஒரு போலீஸ்தான். அவர்களுக்கும் ஒரு கைக்குழந்தை இருக்கிறது. இதனால் வீட்டில் இருந்த மனைவியிடம் செல்போனில் தொடர்புகொண்டு நிலைமையை விளக்கினார். குழந்தைக்கு எப்படி உணவை ஊட்டுவது?
முதலில் குழந்தையின் அழுகையை அமர்த்த ஒரு வழி சொல் என்று கேட்டார். அழும் குழந்தையை எப்படி அமர்த்துவது என்ற மந்திரத்தை போனில் எப்படி சொல்ல முடியும்? ஒரு குழந்தையின் மனம், தாயுள்ளம் கொண்ட ஒரு பெண்ணுக்கு மட்டுமே தெரிந்து இருக்க முடியும். இதை நன்கு உணர்ந்த ரவீந்தரின் மனைவி பிரியங்கா, வாடகைக்கு ஒரு காரை பிடித்து நேராக போலீஸ் நிலையத்துக்கு வந்துவிட்டார்.
அழுது கரைந்த குழந்தையை அள்ளி எடுத்து, ஆசுவாசப்படுத்தினார். சற்று அமைதி நிலவியது. மீண்டும் அழுகை. பிரியங்காவுக்கு புரிந்துவிட்டது. இப்போது குழந்தையை மறைவான இடத்துக்கு சென்று மார்போடு அணைத்து, தன்பிள்ளை போல் நினைத்து, தாய் பால் ஊட்டினார்.
பிரியங்காவின் தாய்மையான அரவணைப்பால் குழந்தையின் அழுகை மட்டும் அல்ல பசியும் அடங்கியது. அதன்பிறகு தலைமறைவான குழந்தையின் தாயை போலீசார் தேடி கண்டுபிடித்தனர். அந்த பெண் சாலைகளில் குப்பை பொறுக்குகிறவள் என்பது தெரியவந்தது. அவளிடம் குழந்தையை ஒப்படைத்து அறிவுரை சொல்லி போலீசார் அனுப்பிவைத்தனர்.
மனித நேயமிக்க பெண் போலீசின் செயல்பாடு குறித்த தகவல் அறிந்த ஐதராபாத் மாநகர போலீஸ் கமிஷனர் அஞ்சானிகுமார், பெண் போலீஸ் பிரியங்காவையும், அவரது கணவரையும் பாராட்டினார்.
இதற்கிடையில் இந்த பெண் போலீஸ் தாயுள்ளத்துடன் செயல்பட்டது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பெண் போலீசுக்கும், அவரது கணவருக்கும் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.