“பிரதமர் மோடி பொய்களை விற்கிறார்” - காங்கிரஸ் கருத்து

பிரதமர் மோடி பொய்களை விற்கிறார் என காங்கிரஸ் கருத்து தெரிவித்துள்ளது.

Update: 2019-01-01 22:15 GMT
புதுடெல்லி,

பிரதமர் மோடியின் சிறப்பு பேட்டி குறித்து காங்கிரஸ் தலைமை செய்தித்தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜிவாலா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-

பிரதமர் மோடியின் பேட்டி, முற்றிலும் வார்த்தை ஜாலம் நிறைந்த ஓரங்க நாடகமாக உள்ளது. 2019-ம் ஆண்டிலாவது அவர் வருத்தம் தெரிவிப்பார் என்று எதிர்பார்த்தால், அவர் பொய்களை விற்க முயற்சிக்கிறார்.

அவரது பேட்டியில் உண்மை நிலவரம் எதுவும் இல்லை. பணமதிப்பு நீக்கம், ஜி.எஸ்.டி. போன்றவற்றால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்பு குறித்து அவர் பேசி இருக்க வேண்டும். ரபேல் விவகாரம் குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு தயாரா?

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்