துல்லிய தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை - பிரதமர் மோடி

கடந்த 2016-ம் ஆண்டு எல்லையை கடந்து இந்திய ராணுவம் நடத்திய துல்லிய தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை என பிரதமர் மோடி கூறி உள்ளார்.;

Update: 2019-01-01 12:11 GMT
புதுடெல்லி,

பிரதமர் நரேந்திர மோடி ஏஎன்ஐ செய்தி ஆசிரியர்  ஸ்மித பிரகாசுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது:-

துல்லிய தாக்குதல் துணிச்சலான நடவடிக்கை. துல்லிய தாக்குதல் நடத்துவதை  2  முறை தள்ளி வைத்து இருந்தோம். ராணுவ  வீரர்களின் பாதுகாப்பிற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. துல்லிய தாக்குதலில் எந்த ராணுவ வீரரும் பலியாகக் கூடாது என உறுதியாக  இருந்தேன் என கூறினார்.

(கடந்த 2016-ம் ஆண்டு  எல்லையை கடந்து இந்திய ராணுவ வீரர்கள் பாகிஸ்தானுக்கு அருகில் உள்ள பயங்கரவாதிகள் முகாம்கள் மீது துல்லிய தாக்குதல் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது)

மேலும் செய்திகள்