உத்தரபிரதேசத்தில் கும்பமேளா: பிரயாக்ராஜில் 3 மாதம் திருமணங்கள் நடத்த தடை

உத்தரபிரதேசத்தில் கும்பமேளா: பிரயாக்ராஜில் 3 மாதம் திருமணங்கள் நடத்த தடை

Update: 2018-12-02 17:24 GMT
லக்னோ, 

உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில்(அலகாபாத்) அடுத்த ஆண்டு கும்பமேளா நடைபெற உள்ளது. இதில் நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டுவந்து புனித நீராடுவார்கள். எனவே பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி பிரயாக்ராஜ் பகுதியில் ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை திருமண விழாக்கள் நடத்த யோகி ஆதித்யநாத் அரசு தடை விதித்துள்ளது.

இதனால் விருந்தினர் இல்லங்கள், விழாக்கள் நடைபெறும் புல்வெளிகள், சமையல்காரர்கள் போன்றவைகளுக்காக முன்பணம் கொடுத்து பதிவு செய்துள்ளவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் பலர் திருமண தேதியை தள்ளிவைத்தனர். வேறு சிலர் பிரயாக்ராஜ் பகுதியை தவிர்த்து வேறு பகுதிகளுக்கு திருமண விழாவை மாற்றிக்கொண்டனர்.

மேலும் செய்திகள்