கல்யாண சாப்பாடு சாப்பிட்டவர்களுக்கு நேர்ந்த சோகம் : 253 பேர் மருத்துவமனையில் அனுமதி
உத்தரகாண்டில் உணவு ஒவ்வாமை காரணமாக மூன்று பேர் உயிரிழந்துள்ள நிலையில், 253 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகேஸ்வர்,
கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று உத்தரகாண்ட் மாநிலத்தின் பாகேஸ்வர் அருகே நடைபெற்ற திருமண விழாவில் உணவருந்திய அனைவருக்கும் உடல் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
உத்தரகாண்ட் மாநிலம் பாகேஸ்வர் அருகே பஸ்தி என்ற கிராமத்தில் கடந்த நவம்பர் 29ஆம் தேதியன்று நடைபெற்ற திருமண விழாவில் உணவருந்திய அனைவருக்கும் திடீரென உடல் ஒவ்வாமை ஏற்பட்டுள்ளது.
மணப்பெண், மணமகன் உட்பட அனைவரும் மாவட்டத்தில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாவட்டத்தை சுற்றிலுள்ள பல்வேறு மருத்துவமனையில் 253 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சிகிச்சை பலன் அளிக்காமல், ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் உயிரிழந்தது, கிராம மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமண விழாவின் போது நடைபெற்ற இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.