உஸ்பெகிஸ்தான் அதிபருடன் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்து
முதன்முறையாக இந்தியா வந்துள்ள உஸ்பெகிஸ்தான் அதிபருடன் 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.;
புதுடெல்லி,
உஸ்பெகிஸ்தான் அதிபர் ஷாவ்கத் மிர்சியோயேவ் முதன்முறையாக நேற்று இந்தியா வந்தார். அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் வரவேற்பு அளித்தார். அவருடன் இன்று பிரதமர் மோடி இருநாட்டு நல்லுறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் இருநாட்டு பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இரு நாடுகள் இடையே 17 ஒப்பந்தங்கள் கையெழுத்தானது. இதில் இரு தலைவர்களும் கையெழுத்திட்டனர்.
தூதரக பாஸ்போர்ட் வைத்துள்ளவர்கள் விசா இல்லாமல் பயணம் செய்வது, ராணுவ கல்வி, வேளாண்மை, தேச பாதுகாப்பு, சுற்றுலா, சுகாதாரம், தூதர்கள் மற்றும் போதை பொருட்கள் கடத்தல் தடுப்பு அதிகாரிகளுக்கு பயிற்சி அளித்தல், அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பான முக்கிய ஒப்பந்தங்கள் இதில் அடங்கும்.