காஷ்மீரில் எம்.எல்.ஏ. வீட்டில் 8 துப்பாக்கிகளை திருடிவிட்டு சென்ற போலீஸ் குறித்து புதிய தகவல்

ஜம்மு காஷ்மீரில் எம்.எல்.ஏ. வீட்டில் 8 துப்பாக்கிகளை திருடிவிட்டு சென்ற போலீஸ் பயங்கரவாத இயக்கத்தில் இணைந்தது தெரிவந்துள்ளது.

Update: 2018-10-01 09:30 GMT

ஜம்மு,

ஸ்ரீநகரில் மக்கள் ஜனநாயக கட்சியின் எம்.எல்.ஏ.வீட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த அடில் பஷிர், அங்கிருந்த 8 துப்பாக்கிகளை எடுத்துக்கொண்டு தலைமறைவு ஆகிவிட்டார். இதனையடுத்து விசாரணை தொடங்கியது. இந்நிலையில் அவர் ஹிஸ்புல் பயங்கரவாதிகளுடன்  இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது. இவ்விவகாரத்தில் அடில் பஷிருக்கு யாராவது  உதவியுள்ளார்களா என்பது தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் ஆயுதங்களுடன் பயங்கரவாத இயக்கத்தில் இணைவது தொடர் கதையாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்