பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் - ப.சிதம்பரம்

பெட்ரோல், டீசல் விலையை குறைக்க உடனடியாக அதனை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும் என ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். #p.Chidambaram

Update: 2018-09-03 16:52 GMT
புதுடெல்லி,

பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று புதிய வரலாற்று உச்சத்தைத் எட்டியுள்ளது. எண்ணெய் நிறுவனங்கள் இன்று பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து 9-வது நாளாக உயர்த்தியுள்ளன. இதையடுத்து பெட்ரோல், டீசல் விலையேற்றத்துக்கு பலர் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலை, டெல்லியில் 71.15 ரூபாயாகவும், மும்பையில் 75.54 ரூபாயாகவும், கொல்கத்தாவில் 74.00 ரூபாயகவும், சென்னையில் 75.19 ரூபாயாகவும் உள்ளது. ஆகஸ்ட் 16-ம் தேதி முதல் பெட்ரோல் விலை 2 ரூபாய் அதிகரித்துள்ளது. டீசல் விலை 2.42 ரூபாய் அதிகரித்துள்ளது. டீசல் விலை தொடர்ந்து அதிகரித்து உச்சத்தைத் தொட்டுள்ளதால், விலைவாசி உயர்வில் தாக்கம் ஏற்படுத்தும் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில் தொடர்ந்து உயர்ந்து வரும் டீசல் விலையேற்றம் குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம்,‘பெட்ரோல், டீசல் விலை உயர்வு தவிர்க்க முடியாதது அல்ல; அதிகப்படியான வரிகளால் விலை நிர்ணயிக்கப்படுகிறது. மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் மீதான வரிகளை குறைத்தால் பெட்ரோல், டீசல் விலை குறைந்துவிடும். மேலும் பெட்ரோல், டீசலை ஜிஎஸ்டி வரி வரம்புக்குள் கொண்டுவர வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்