கிருஷ்ண ஜெயந்தி விழா: மும்பையில் உரி அடி நிகழ்ச்சியில் 36 பேர் காயம்
மும்பையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவின் தஹி-ஹண்டி எனப்படும் உரி அடி நிகழ்ச்சியின் போது 36 பேர் காயமடைந்துள்ளனர்.
மும்பை,
மராட்டியத்தில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு நடக்கும், தயிர் பானை உடைக்கும் உறியடி நிகழ்ச்சி, மிகவும் பிரபலம். கிருஷ்ண ஜெயந்தி விழா,நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
இந்தநிலையில் மராட்டிய மாநிலத்தில் பல்வேறு இடங்களில், உறியடி நிகழ்ச்சி நடந்தது. மனித கோபுரங்கள் அமைத்து, தயிர் பானைகள் உடைக்கப்பட்டன.
இந்தநிலையில் மும்பையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக தஹி-ஹண்டி எனப்படும் உரி அடி நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வின் போது உரி அடி நிகழ்ச்சியின் போது தவறி ஒருவர் மீது ஒருவர் விழுந்ததில் 36 பேர் காயடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவனையில் சேர்க்கப்பட்டனர். தானேவிலும் உரி அடி நிகழ்ச்சியின் போது ஒருவர் காயமடைந்துள்ளார்.