போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நடிகர் சஞ்சய் தத் நியமனம்

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கபடவுள்ளார். #SanjayDutt

Update: 2018-09-02 10:15 GMT
புதுடெல்லி,

பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் உத்தரகாண்ட் உள்ளிட்ட மாநிலங்களுக்கு போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கபடவுள்ளார்.

இதுதொடர்பாக சஞ்சய் தத்துடன் தொலைபேசியில் பேசியதாக உத்தரகாண்ட் முதல்-மந்திரி திரிவேந்திரா சிங் ராவத் தெரிவித்துள்ளார்.  அப்போது ​​திரைப்படங்களில் நடிக்க வந்த ஆரம்ப நாட்களில் தானும் போதை பொருளுக்கு அடிமையாகி இருந்ததை அவர் நினைகூர்ந்ததாகவும் கூறினார். 

உத்தராகண்ட், டெல்லி, சண்டிகர் மற்றும் இமாச்சல பிரதேசம், அரியானா, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் சஞ்சய் தத் போதை பொருள் ஒழிப்பு தூதுவராக நியமிக்கப்படவுள்ளார். 

மேலும் செய்திகள்