நாகலாந்து வெள்ளத்தால் பாதிப்பு: ”நாகலாந்து மக்களுக்கு தோளோடு தோள் நிற்போம்” டுவிட்டரில் மோடி தகவல்

நாகாலாந்தில் பெய்த கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். #NagalandFlood;

Update: 2018-09-02 05:49 GMT
கொஹிமா,

தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை, நாடு முழுவதும் சில வாரங்களின் சில நாட்களில் பெய்துள்ளது என்றும், கடந்த 5 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தில் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

இந்தநிலையில், கேரளாவை தொடர்ந்து  நாகாலாந்திலும் பெய்து வரும் கன மழை காரணமாக மலை கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டது. கனமழைக்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர். ரூ.800 கோடி சேதம் ஏற்பட்டுள்ளது. 

இந்தநிலையில் நாகலாந்து மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து முதல் மந்திரி ரியோவிடம் பிரதமர் மோடி கேட்டறிந்தார்.

இது குறித்து பிரதமர் மோடி டுவிட்டரில் கூறியிருப்பதாவது:

நாகலாந்தில் பெய்து வரும் கனமழை பாதிப்பு குறித்து முதல் மந்திரியிடம் கேட்டறிந்தேன். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நாகலாந்து மக்களுக்கு தோளோடு தோள் நிற்போம்.  மாநில அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து தரும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்